முத்தை
==========
தொல்காப்பிய 'நறுக்' … - பகுதி 1-இல் தொல்காப்பியர் பயன்படுத்திய "இம்பர்," "மிசை" என்ற சொற்களின் வரவு பற்றிப் பார்த்தோம்.
இந்தப் பகுதியில் (தொல்காப்பிய 'நறுக்' … - பகுதி 2) ... முத்தை என்ற சொல்லைப்பற்றிச் சொல்ல விரும்புகிறேன். என் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டவை: தொல்காப்பியம், சங்கப்பாடல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை.
முத்தை எனும் சொல் காணும் இடங்கள்:
தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 165, பதிற்றுப்பத்து 85, சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை, மணிமேகலை 18: 144; 19: 13
தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 165, பதிற்றுப்பத்து 85, சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை, மணிமேகலை 18: 144; 19: 13
முத்தை என்பதை உ.வே.சா தொடங்கிப் பலரும் முந்தை என்பதன் வலித்தல் விகாரம் என்கிறார்கள். அது எனக்குச் சரிப்பட்டு வரவில்லை. தொல்காப்பியத்தில் முத்தை என்பதும் முந்தை என்பதும் தனித்தனியாக ஆளப்பட்டிருக்கின்றன.
என்ன ஆனாலும் இந்தச் சொல் முத்து+ஐ என்ற பிரிவுக்குள் அடங்காது.
உங்கள் கருத்து என்ன என்று தெரிந்துகொள்ள ஆவல்.
++++++++++
சரி, நம்ம கதைக்கு வருவோம். உங்கள் சிறுவர்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கிறீர்கள்.
நீங்கள்: தம்பீ, இப்ப மணி என்ன?
பிள்ளை: ரெண்டு கால்
நீங்கள்: அப்படிச் சொல்லக்கூடாது.
பிள்ளை: ஏன்?
நீங்கள்: ரெண்டேகால்-னு சொல்லணும்.
பிள்ளை: ஏன்?
நீங்கள்: அப்படித்தான் சொல்லணும்.
பிள்ளை: போங்கம்மா/போங்கப்பா தமிழ் ரொம்ப difficult.
உங்கள் மூளைக்குள் ஒரு நெருடல். ஆமா, அது ஏன் இரண்டு என்பதுக்கும் கால் என்பதுக்கும் இடையில் ஒரு ஏ வரணும்?
கவலற்க! நம்ம தொல்காப்பியர் அப்படித்தான் சொல்லிவச்சிருக்காரு! ;-)
++++++++++
இணையத்தில் அளவை அடுக்குப் பொருள்களின் படங்கள் கிடைக்கும் ( measuring spoons and cups )
அவற்றில் ஏதாவது ஓர் அளவையை (X என்று குறித்து) எடுத்துக்கொள்ளுவோம். அதுக்குத் தொட்டடுத்து உள்ளடங்கி, கீழாக, சிறிதாக ஓர் அளவை இருக்கு பாருங்கள், அதுதான் நாம் எடுத்துக்கொண்ட அளவைக்கு (X-க்கு) 'முத்தை.' இதை X-n என்று குறிப்போம். இதுவே தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பா 165-இல் உள்ள 'முத்தை' என்ற சொல் குறிப்பது.
கணித இயலில், factorial குறியீட்டில், காணும் "descending natural number(s)" என்ற கருத்து நினைவுக்கு வருகிறது. காட்டாக, 5! = 5 x 4 x 3 x 2 x 1 அல்லவா?
இந்த 'முத்தை'யின் சிறப்பு என்னவென்றால் … இது வேறு எந்த ஒன்றினுக்கு உள்ளடங்கியிருக்கிறதோ அதற்கு அடிப்படை! இது (முத்தை) இல்லாமல் அந்த வேறொன்று உருவாகியிருக்க முடியாது. 2 இல்லாமல் 3 இல்லை; 4 இல்லாமல் 5 இல்லை, அல்லவா.
இந்த மாதிரி இடங்களில் முதல் எண்ணுக்கும் தொடர்ந்துவரும் எண்ணுக்கும் இடையில் ஏ என்ற சாரியை வரும் என்பது தொல்காப்பியர் சொன்னது.
எடுத்துக்காட்டு: இரண்டேகால் (அளவு, எண், காலம்), முக்காலேமூணுவீசம் (நிறை)
++++++++++
'முத்தி'ப்போச்சு என்ற பேச்சுவழக்குக்கும் 'முத்தி' என்ற பழைய சொல்லுக்கும் தொடர்பு இருக்குமோ???