இலக்கியத்தேன் பருகத் தமிழார்வலர்கள் வந்தார்கள்!!!
----------------------------------------------------------------------
அக்டோபர் 3, 2015 காலை 9-மணிக்குத்தொடங்கிச் சிலமணிநேரங்கள் பொழுதுபோனதே தெரியாமல் ஓர் இலக்கியச்சுவையரங்கம் என் வீட்டில் அமைந்தது.
சங்க இலக்கியப்பாடல்கள் (8-தொகை, 10-பாட்டு) என்று ஒட்டுமொத்தமாக அனைத்தையும் ... எந்த நிறுவனத்திடமும் உதவித்தொகையை எதிர்பாராமல் தன்னந்தனியாக மொழிபெயர்த்து, தன் சொந்தச்செலவில் வெளியிட்ட திருமிகு வைதேகி ஹெர்பர்ட் அவர்கள் இங்கே எங்களூர்ப்பக்கம் வந்திருப்பதை அறிந்து, இந்த இலக்கியக்கூட்டத்தை நடத்தவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தேன். அவரும் தங்கள் உறவினர் வீட்டுத் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகளிலிருந்து நேரம் எடுத்து, இந்த நிகழ்ச்சிக்கு வருவதெனக் கனிவுடன் இசைந்தார்.
பிறகென்ன ... காலை 9-மணிமுதல் 11-மணிவரை என்ற வரையறை கடந்து ... பிற்பகல் சுமார் 3-மணிவரை எல்லாம் தமிழின்பமயம்!
முதலில் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய மிகவும் தயங்கினேன் -- எத்தனைப்பேருக்கு ஆர்வம் இருக்குமோ, வருகிறவர்களுக்கு என் வீட்டுத்தரையில் உட்கார இடம் இருக்குமா, வருகிறவர்களுக்கு வண்டி நிறுத்த இடம் கிடைக்குமா ... என்று பலப்பல வகையில் கவலை.
என் தயக்கத்தைச் சிறிதும் பொருட்படுத்தாமல் ... பல மைல் தொலைவிலிருந்தும் வந்த (~25 பேர்) அனைவரும் தரையில் ஆடாமல் அசையாமல் அமர்ந்தும் சங்கப்பாடல்களைச் சுவைத்தும் தத்தம் கருத்துகளைப் பகிர்ந்தது என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்திவிட்டது! ஆனந்தக்கண்ணீர் ('உவகைக்கலுழ்ச்சி') பெருகியது. இது கலப்படமற்ற உண்மை!
திருமதி வைதேகி அவர்கள் தாம் தேர்ந்தெடுத்திருந்த பாடல்களின் கோப்பை நிகழ்ச்சிக்கு முன்னதாகவே எல்லாருக்கும் அனுப்பியிருந்தார்; செல்வி சிவகாமி அவர்கள் எல்லாருக்கும் தேவையான படிகள்/நகல்கள் எடுத்துக்கொண்டு வந்திருந்தார்; ஒவ்வொருவரும் தனக்கென ஓர் எழுதுகோல் மட்டும் கொண்டுவரவேண்டும் என்றும் சொல்லியிருந்தார். ஆக, இலக்கியச்சுவைப்புக்குத் தேவையான பாடுபொருள், எழுதுகோல், திறந்த மனம், அயர்வில்லாக் கண்கள், ஆர்வம் ... இவையெல்லாம் உந்துகருவிகளாயின.
பலரும் கொண்டுவந்திருந்த உணவுப்பொருள்கள் பலவகை! 25-பேருக்கு 4-மணி நேரத்துக்குப் போதுமான சுடுசுடு "குளம்பி" (==காப்பி), பழச்சாறுகள், பலவகைப் பழங்கள் (apples, grapes, bananas), "பிஸ்கட்" வகைகள் (cookies and other snacks), bagels, croissants, muffins, ஹவாயீ மேக்கடேமியா (macademia), ... so on and so forth. அவற்றை வைக்க என் மேசையில் இடம் போதவில்லை என்றால் ... நினைத்துப்பாருங்களேன்!
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் எல்லாரும் "குளம்பியை (காப்பியை)" மட்டும் எடுத்துக்கொண்டு சிலை-போலத் தரையில் அமர்ந்தார்கள்!
ஒரு குறுக்குப்பேச்சு இல்லை! ஒருவர் தன் கருத்தைச் சொல்லி முடித்த பின்னரே அடுத்தவர் தன் கருத்தைச் சொன்னார்.
ஒன்றரை மணிக்கூறு கழித்து, வயிற்றுக்கு உணவு ஈவதற்காக என்றே செவிக்குணவு ஈவதை நிறுத்தச்சொல்லி நான்தான் குறுக்கிட்டேன்.

நண்பர்கள் சொக்கலிங்கம்-சிவகாமி இணையர்களின் இளையர் அஸ்வினும் எங்கூர்ப்பொண்ணு சுபாவும் (சுபா ராஜேஷ்) பிறரும் எடுத்த நிழற்படங்களை இங்கே இணைக்கிறேன்.
வந்திருந்த எல்லாரும் படங்களில் இல்லை, ஒளிந்துகொண்டார்களோ?! திரு டில்லி துரை எங்கே?
ரம்யா + 'விழுதுகள் சிற்பி' திரு உதய் பாஸ்கர் + திரு சுந்தர் குட்டி (?) + திரு இந்திரா தங்கசாமி.
டாக்டர் ஜானகிராமன் + செல்வர் தொல்காப்பியன். இருவரும் தத்தம் கோவைக்கல்லூரி (பி.எஸ்.ஜி) நாள்பற்றிக் கதைக்கிறார்கள்-போல! டாக்டர் ஜானகிராமனின் அருமை மகன் விக்ரம் என் அருமை மாணவன்.
செல்வியர் சாந்தி புகழ் + நளாயினி (ஈழத்தமிழர்)
திரு கந்தசாமி ('Kandy') என்ற கந்தவேள்! தமிழ்_இலக்கியம் குழுவில் கலக்குபவர். இவர் காதில் ஒரு சங்கப்பாடல் விழட்டும் ... பதினூறு பாடல்கள் நமக்குக் கிடைக்கும்! அந்த அளவு இலக்கிய அறிவும் ஆழமான புலமையும்.
திருவாளர்கள் ஜெயக்குமார், சுந்தர், சொக்கலிங்கம்
செல்வியர் சுபா, நித்யா, சிவகாமி. இந்தப்படை வெல்லாத நிலமில்லை!
செல்வி ரம்யா, விழுதுகள் 'வெட்டுநர்' திரு உதய் பாஸ்கர்
செல்வி சிவகாமி, செல்வர் தினேஷ்
திருமிகு நளாயினி, செல்வர் தினேஷ்
திரு தில்லைக்குமரன் (2015 ஃபெட்னா இணைப்பாளர்; எங்களூர்த் தமிழியக்கத்தின் தூண்), திரு சுந்தரபாண்டியன்
செல்வி சாந்தி புகழ், ஆயி-அவ்வா, செல்வி பாரதி (இப்போது பெர்க்கிலியில் தமிழ் + தெலுங்கு கற்பிக்கிறவர்; எங்கள் பாத்திமாக்கல்லூரி மாணவியாக்கும்!)
செல்வி சாந்தி புகழ் + ஆயி-அவ்வா
திரு சுந்தரபாண்டியன், திரு உதய் பாஸ்கர், திருமிகு நளாயினி
செல்வியர் செல்வர் பலர்
++++++++++
நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகத் தினையை ஊறவைத்துப் பிறகு அதைத் தேங்காய்ப்பூவுடன் அரைத்து அந்த விழுதோடு பாதாம்பருப்புத்தூளைப் (almond meal) போட்டு ... பனைவெல்லச்சருக்கரையைச் (organic coconut palm sugar) சேர்த்துக் கொஞ்சூண்டு தேங்காயெண்ணை (unrefined coconut oil) விட்டுக் கலக்கிக் கிளறி ... ஏலக்காய்த்தூளும் பச்சைக்கற்பூரமும் சேர்த்து ... பிஸ்தாப்பருப்பைப் பரப்பிச் 'சோடனை' செய்து தயாரித்தும் ... ... ... இலக்கியத்தேன் பருகும் ஆர்வத்திலும் வந்த ஆர்வலர்களுடன் உரையாடும் கலகலப்பிலும் ... ... ... பரிமாறப்படாமல் மறக்கப்பட்ட 'தினைப்பால் பாதாம் அல்வா!!!'
++++++++++
தோட்டத்தில் ஈடுபாடு ...
இந்த இலக்கிய நிகழ்ச்சியின்வழியே மிக அருமையான நண்பர்களின் தொடர்பு அமைந்தது என் கொசுறுப்பேறு.
இலக்கிய நிகழ்ச்சிக்கு வந்த எல்லாருக்கும் சின்னஞ்சிறிய கறிவேப்பிலைக்கன்று ஒன்றை எடுத்துச் செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டது. பலரும் எடுத்துப்போனார்கள்.
கன்றுகளுக்குத் 'தமிழ்' என்ற பெயர் வைக்கும்படிக் கேட்டுக்கொண்டேன்.
கன்றுகளுக்குத் 'தமிழ்' என்ற பெயர் வைக்கும்படிக் கேட்டுக்கொண்டேன்.
திரு சொக்கலிங்கம் -செல்வி சிவகாமி இணையரின் இளையர் அஸ்வின். அவர் பின்னே என் கொடிப்பசலை (Malabar spinach).
அண்மையில் யான் கண்டுகொண்ட "வனமாலீ" (வனமாலி, an epithet of Vishnu as wearing a basil garland.) ஜெயக்குமார்! இவர் கைச்சிறப்பால் என் தோட்டம் உருப்படப்போகிறது என்று நினைக்கும்போதே பூக்களும் காய்களும் மனக்கண்ணில் தோன்றித்தோன்றி மகிழ்வூட்டுகின்றன.
++++++++++
அன்பு நண்பர்களே, தமிழைப் படிப்பதைத் தொடருங்கள். தமிழின் தொன்மை தானாக நிலைபெறும்.
அன்புடன்,
ராஜம்